தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
இலங்கைகயின் பிரதான வர்த்தக நிலையமான தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம், வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தம்புள்ள வர்த்தக சங்க உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
போலிப் பிரச்சாரங்கள்
மேலும், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என சுட்டிகாட்டியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் தொலைபேசி ஊடாக விவசாய அமைச்சரை தொடர்பு கொண்டு இந்த சர்ச்சை குறித்து கேட்டறிந்து வர்த்தகர்களை அமைச்சர் பிரமித்த தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை கண்டு மக்கள் ஏமாறக் கூடாது என அவர் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
