காற்றுடன் கூடிய மழையால் தம்பலகாமத்தில் பாரிய சேதம்
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய சுழல் காற்றினால் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தம் நேற்று இரவு (26.12.2023) இடம்பெற்றுள்ளது.
பலத்த சேதம்
தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம், இக்பால் நகர் முதலான பகுதிகளில் சுமார் ஐந்திற்கு மேற்பட்ட வீடுகளின் கூரைகளும் கடை ஒன்றும் சேதமடைந்துள்ளது.
மேலும் கன மழையுடன் வீசிய காற்றினால் மரங்களும் முறிந்துள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்குவதற்கு இடமின்மை
அனர்த்தம் காரணமாக குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளமையால் தங்குவதற்கு இடமின்றி பல அசௌகரியங்களை தாம் எதிர் நோக்குவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே. இது தொடர்பில் உரிய அதிகாரிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
