நாட்டில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்த நிலையில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
57 எச்சரிக்கை கோபுரங்கள் முற்றிலும் செயலிழப்பு
செயலிழந்த 77 கோபுரங்களில் 11 எச்சரிக்கை கோபுரங்கள் பேரிடர் மேலாண்மை மையத்திலிருந்தும் 9 எச்சரிக்கை கோபுரங்கள் கீழ் மட்டத்திலிருந்தும் செயல்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
எனினும் மற்றைய 57 எச்சரிக்கை கோபுரங்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எச்சரிக்கை கோபுரங்களுக்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் அமெரிக்க சமிக்ஞை நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டு வந்தது.
எனினும் பின்னர், பேரிடர் முகாமைத்துவ மையத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் மாவட்ட அளவில் பொலிஸ் மற்றும் இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் அமுல்! நிபந்தனையின்றி ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
