ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்!சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் வெளியானது
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவான 'மண்டோஸ்' சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூறாவளியின் தாக்கம் நேற்று (08.12.2022) மற்றும் இன்று (09.12.2022) நாட்டின் பல பகுதிகளை பாதித்துள்ளது.
1,302 வீடுகள் சேதம்
இந்த மண்டோஸ் சூறாவளியால் நாட்டில் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 1,302 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்படைந்துள்ள மாவட்டங்கள்

இதன்போது 1,302 குடும்பங்களைச் சேர்ந்த 4,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் (ஊடக) பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும் ஊவா மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 723 குடும்பங்களைச் சேர்ந்த 2,093 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேரும், அந்த மாகாணத்தில் 916 குடும்பங்களைச் சேர்ந்த 2,093 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam