சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos)

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka Weather
By Kajinthan Dec 09, 2022 12:12 PM GMT
Report

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சூறாவளியின் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்து நிலவிய கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையின் காரணமாக தற்போது வரை 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்ததுள்ளார்.

பாதிப்பு

38 குடும்பங்களைச் சேர்ந்த142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 சிறுதொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos) | Jaffna People Affected Due Inclement Weather

சண்டிலிப்பாயில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் உடுவில் பகுதியில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலைய பெண்கள் விடுதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பாக நல்லூர் , பருத்தித் துறை ஊர்காவற்துறை கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது.

மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக நாளை வரை எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் தமக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தார். 

செய்தி:  தீபன் 

மரம் முறிவு

சூறாவளி தாக்கத்தால் நேற்று இரவு யாழ். மத்திய வீதி, பலாலி வீதி மற்றும் கந்தர்மடச் சந்தியினை இணைக்கும் பிரதான வீதியில் சமண்டலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos) | Jaffna People Affected Due Inclement Weather

இதனால் போக்குவரத்து செய்யும் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மேலும் நீர்வேலி, கோப்பாய், புன்னலைக்கட்டுவன், புத்தூர், வசாவிளான், உரெழு உள்ளிட வாழைத்தோட்டங்களில் உள்ள வாழைமரங்களும், வாழைக்குலைகளும் பெரும் அளவு முறிந்து காணப்படுகின்றன.

இதனால் விவசாயிகள் மிக அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos) | Jaffna People Affected Due Inclement Weather

செய்தி: கஜிந்தன், தீபன் 

போக்குவரத்து பாதிப்பு

வீசிய பலத்த காற்றினால் சேந்தாங்குளத்தில் இருந்து மாதகல் செல்லும் வீதியில் ஓரத்தில் நின்று மரம் இன்று (09.12.2022) காலை முறிந்து வீதிக்கு குறுக்காக விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos) | Jaffna People Affected Due Inclement Weather

 இதனால் குறித்து வீதியூடாக பயணம் செய்த பயணிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மரத்தினை வீதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். 

செய்தி: கஜிந்தன் 

வீட்டின் மேல் முறிந்து விழுந்த மரம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos) | Jaffna People Affected Due Inclement Weather

யாழ்.காரைநகர் - முந்திப்புலம் ஜே/48 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் மேல் மரம் முறிந்து விழுந்ததால் வீடு பாரிய அளவில் சேதமடைந்துள்ளது. 

இந்த அனர்த்தத்தில் வீட்டில் உள்ள ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை.       

செய்தி: கஜிந்தன் 

மன்னார்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos) | Jaffna People Affected Due Inclement Weather

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது. 
சூறாவளி தாக்கத்தினால் நேற்று (08.12.2022) இரவு மன்னார் மாவட்டத்தில் கடும் காற்று வீசியதுடன் கடுமையான குளிர் நிலை ஏற்பட்டதோடு மழையும் பெய்துள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos) | Jaffna People Affected Due Inclement Weather

மேலும் மன்னார் தாழ்வுபாடு மீன கிராமத்தில் மீனவர்களின் மீன் வாடிகள் காற்றினால் சேதமடைந்துள்ளது.
மேலும் படகுகள் மற்றும் மீன் வலைகள் சேதமடைந்துள்ளது.


செய்தி: ஆசிக்

வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos) | Jaffna People Affected Due Inclement Weather

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக ளவில் வாழை தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி,கந்தன்,நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் நேற்றிரவு காணப்பட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையினால்அதிகளவு வாழை மரங்கள்வாழை குலையுடன் முறிந்து விழுந்து உள்ளதாக வாழைத்தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதிகளிலுள்ள பயன்தரு வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos) | Jaffna People Affected Due Inclement Weather

நேற்று இரவு திடீரென ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக தமது வாழைகள் முறிந்து விழுந்துள்ளதால் தமக்கு அரச அதிகாரிகள் நஷ்ட ஈட்டினை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்காலிக இடைநிறுத்தம்

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்கள்! (Photos) | Jaffna People Affected Due Inclement Weather

இன்று(09.12.2022) வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

செய்தி: தீபன்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US