மட்டக்களப்பில் முற்றாக சேதமடைந்த அணைக்கட்டு: விவசாயிகள் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் வவுணதீவுப் பிரதேசத்திற்குட்பட்ட இலுப்பட்டிச்சேனை வயற்கண்ணத்தில் அமைந்துள்ள நல்லம்மா மடு எனும் அணைக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த அணைக்கட்டில் தேக்கப்படும் நீரைப் பயன்படுத்தி நாம் இப்பகுதியில் 1050 ஏக்கர் வயலில் வேளாண்மை செய்து வருகின்றோம்.
இது தற்போது உடைபெடுத்துள்ளதனால் தமது வாழ்வாதாரமாக அமைந்துள்ள வேளாண்மைச் செய்கை முற்றாக பாதிப்புறும் நிலைமை எற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
விவசாயத்துறை
இந்நிலையில், இன்றையதினம் சனிக்கிழமை(07.12.2024) அப்பகுதிக்கு விஜயம் செய்து விவசாயிகளின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், வெள்ள அனர்த்தத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பார்வையிட்டு, மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
“அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாரிய பாதிப்பை மட்டக்களப்பு மாவட்ட மக்களும் விவசாயிகளும், எதிர்கொண்டுள்ளார்கள். இதனால் அப்பகுதியில் உள்ள மிகப் பிரதான அணைக்கட்டு பாரிய சேதத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய விவசாயத்துறையை பாதுகாக்க வேண்டும். அதன் மூலமாக பஞ்சம், பசி, பட்டினியில்லாமல் மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த சிந்தனையோடு அவர்கள் செயற்படுகின்றார்கள்.
புனரமைப்பு
எனவே, அண்மையில் பெருவெள்ளத்தினால் பெரிதும் சேதமடைந்துள்ள விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்த அணைக்கட்டை, விரைவாக நிர்மானம் செய்துதர வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
அதுபோல் நீர்ப்பாசனம் செய்யப்படுகின்ற துருசுகளையும் திருத்தி அமைத்து தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றார்கள்‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
