தலதா மாளிகை அவமரியாதை: பௌத்த மக்களுக்கு சட்டத்தரணி ஊடாக வந்த அறிவிப்பு
தலதா மாளிகை தொடர்பில் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான சேபால்அமரசிங்க, உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கத் தயார் என தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்துள்ளார்.
இதற்கமைய சேபால் அமரசிங்க, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரருக்கு எழுதிய கடிதத்தில்,பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டிருந்தால், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக சட்டத்தரணி தர்ஷன குருப்பு மூலம் தெரிவித்துள்ளார்.
பௌத்த தத்துவம் மற்றும் தலதா மாளிகை
பௌத்த தத்துவம் மற்றும் தலதா மாளிகையை அவதூறு செய்யும் நோக்கம் தமக்கு இல்லை என்பதை தெரிவிக்குமாறு தனது கட்சிக்காரர் குறிப்பிட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தர்ஷன குருப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
