அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் ஹட்டனில் ஆர்ப்பாட்டம் (Photos)
அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து ஹட்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் (09.02.2023) நடைபெற்றுள்ளது.
பெறப்பட்ட கடனுக்கான வட்டியை அதிகரிக்கக் கூடாது எனவும், வருமான வரியை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் கோரியும் அட்டன் பிரதேசத்திலுள்ள அனைத்து தபால் நிலைய ஊழியர்களும் தொழிற்சங்க பேதமின்றி ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல் தபால் நிலைய ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்தும், கறுப்புக்
கொடிகளால் தபால் நிலைய வளாகத்தை அலங்கரித்தும் தபால் நிலையங்களை மூடி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri