இலங்கையில் தினசரி மின்சாரத் தேவையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிக்கையொன்றின் மூலம் இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
மின்சாரத் தேவை
இதற்கமைய, ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மின்சாரத் தேவை 2947 மெகாவோட்டாகக் காணப்பட்டதுடன், அது செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 2936 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளது.
அதேமாதம் இரண்டாம் திகதி அந்த பெறுமதி 2934 மெகாவோட்டாக பதிவாகியிருந்தது. செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி தினசரி மின்சாரத் தேவை 2920 மெகாவோட்டாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி
அத்துடன், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அது செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரம் வரை உயர்வடைந்துள்ளது.
எனினும், செப்டெம்பர் மாதம் 2 மற்றும் 3ஆகிய திகதிகளில் முறையே 58.34 மற்றும் 58.08 கிகாவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri