பிரித்தானியாவை அச்சுறுத்தும் கோவிட் தொற்று! - புதிய தரவுகள் வெளியாகின
அரசாங்க தரவுகளின்படி, பிரித்தானியாவில் கோவிட் 19 வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 36,389 புதிய கோவிட் 19 வழக்குகள் மற்றும் 64 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்த நாளுடன் ஒப்பிடும்போது தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 15,000 க்கும் அதிகமாக குறைந்திருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நேற்றைய தினம் 39,906 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 84 கோவிட் மரணங்களும் பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அந்நாட்டு சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்திருப்பதாவது,
"இந்த முடிவு சமீபத்திய தரவு மற்றும் உள்ளூர் நுண்ணறிவுகளை அடிப்படையாகக் கொண்டது, மேலும் பிராந்தியத்தில் கோவிட் 19 வகைகளின் வளர்ச்சியைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் கோவிட் வழக்குகள் மற்றும் மரணங்கள் தொடர்பில் தேசிய சுகாதார சேவை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இங்கிலாந்தில் சுமார் 43,000 பேர் நேற்றைய தினம் கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளனர். அத்துடன் 174,742 பேர் இரண்டாவது அளவினை பெற்றுக்கொண்டனர்.
அந்த வகையில், தடுப்பூசியின் முதல் அளவினை பெற்றிவர்களின் எண்ணிக்கை 46,476,845 ஆக உயர்ந்துள்ளதுடன், இரண்டாவது அளவினை பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,762,646 ஆக உயர்ந்துள்ளது.
ஜூலை 19ம் திகதி சுமார் 870 கோவிட் நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், கடந்த ஏழு நாட்களில் 5,322 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது வாராந்திர 28 வீத உயர்வாகும். மேலும் பிப்ரவரி 25ம் திகதிக்கு பின்னர் ஒரே நாளில் மிக அதிகமான பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
