நாளை முதல் அதிகரிக்கப்படும் தேங்காய் விநியோகம்
லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, நாளை முதல் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
உற்பத்தி தடை
கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள சதொச கிளைகளில் வாடிக்கையாளர்கள் நாளை முதல் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும், 130 ரூபாவுக்கு ஒரு தேங்காயை கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தேங்காய் உற்பத்தி தடைபட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri