அநுரவின் தலைவர்களுக்கு அரணாகச் செயற்பட்ட தமிழ் தலைவர்கள்
ஜேவிபி(JVP) முன்னைய காலங்களில் அவர்களுடைய அரசியல் உரிமை போராட்டங்களில் தமிழர்களுக்கு ஆதரவாக எப்போதும் இருந்ததில்லை. ஆனால், தமிழர்கள் ஏதோவொரு வகையில் ஆதரவாக இருந்துள்ளார்கள்.
1977 தேர்தல் காலகட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹன விஜயவீர(Rohana Wijeweera) சிறையிலிருந்தார்.
இதேநேரத்தில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கம் மற்றும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்தார்கள் என்ற ரீதியில் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் ஜிஜி.பொன்னம்பலம் அவசரகால தடைச்சட்டம் சரியான முறையில் பிரயோகிக்கப்படவில்லை என்ற ரீதியில் வாதிட்டார். இந்த வழக்கிற்கு அவசரகால தடைச்சட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் மூலம், அமிர்தலிங்கம் மற்றும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டநிலையில் அவசரகால தடைச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட ரோஹன விஜயவீர விடுதலை செய்யப்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற ஊடகவியலாளர் எஸ்.மகாலிங்கசிவம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |