மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக M. T. M. தாஹிஸ் தெரிவு
மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் M. T. M. தாஹிஸ் நேற்று(03.08.2026) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் மூதூர் பிரதேச சபையின் ஆட்சி பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.
புதிய தவிசாளர்
புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் A. T. M. ராபி தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது புதிய தவிசாளரின் பெயரை இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கிடையே எட்டப்பட்ட ஒரு வருட கால தவிசாளர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், பதவி வகித்த முந்தைய தவிசாளர் கடந்த 10 ஆம் திகதி தனது பதவியை பதவி விலகல் செய்தார்.
மூதூர் பிரதேச சபை
அதனைத் தொடர்ந்து, காலியான தவிசாளர் பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் முன்னெடுத்திருந்தார். மூதூர் பிரதேச சபையானது மொத்தம் 22 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 05 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 04 உறுப்பினர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 03 உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தி 03 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்களையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 02 இரு உறுப்பினர்களையும், தேசிய காங்கிரஸ் 01 உறுப்பினரையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 01 உறுப்பினரை சுயேச்சைக் குழு 01 உறுப்பினரையும் கொண்டுள்ளது.
தவிசாளர் தெரிவின் போது, புதிய தவசாளர் பதவிக்காக, வேறு எவரும் பிரதிக்கப்படாத நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் M. T. M. தாஹிஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.