இந்திய மக்களவையின் சபாநாயகராக பெண் ஒருவரை நியமிக்க வாய்ப்பு
இந்தியாவின் மக்களவை சபாநாயகராக ஆந்திராவின் ராஜமுந்திரி பாரதீய ஜனதாக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டகுபதி புரந்தேஸ்வரி (Daggubati Purandeswari) தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் மகளான டகுபதி புரந்தேஸ்வரிக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படாததால் மக்களவை சபாநாயகராக அவர் தெரிவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், சபாநாயகர் பதவி தொடர்பில் ஆளும் கூட்டணியின் முக்கிய தலைவர்களான சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஸ்குமார் ஆகியோர் நிபந்தனைகளை முன்வைத்ததாக வெளியான தகவலின்படி, மக்களவை சபாநாயகர் குறித்து முடிவு செய்ய கூட்டணிக் கட்சிகளுடன் பாரதிய ஜனதாக்கட்சி எதிர்வரும் 12ஆம் திகதி ஆலோசனை நடத்த உள்ளது.
புதிய மக்களவை
இதன்போது, மாற்றங்கள் ஏதும் நடக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். புதிய மக்களவையின் முதல் கூட்டம் வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 மற்றும் 19 ஆம் திகதிகளில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனையடுத்து 20 ஆம் திகதியன்று சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 21 ஆம் திகதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றில் உரையாற்றுவார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |