ஐஸ் கொள்கலன் வெளியேற்றம் : மறைத்த தகவலை வெளியிட்ட சானக்க எம்.பி
சுங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பில் பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றின் போதே டி.வி.சானக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசின் தொடர்பு
அரசாங்கத்தின் உதவி இல்லாமல் இந்த கொள்கலன்கள் எக்காலத்திலும் வெளியில் செல்ல முடியாது. The Drug Enforcement Administration (DEA) அமெரிக்க நிறுவனம் இந்த கொள்கலன்களில் போதைப்பொருள் இருப்பதாக அறிவித்த போது இரு கொள்கலன்களும் சிவப்பு பட்டியலிடப்பட்டன.
இதை நினைத்த மாத்திரத்தில் வெளியில் விட முடியாது. முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கொள்கலன்கள் வெளியில் விடப்பட்டதென்றால் அரச தரப்பில் யாரோ ஒருவர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்க வேண்டும்.
    
நாமலின் கேள்வி
அரசாங்கம் தொடர்புபட்டிருப்பதற்கு முதல் உதாரணமாக கைது செய்யப்பட்டுள்ள மனம்பேரி, கெஹல்பத்தர பத்மே உட்பட அனைவரிடமும் விசாரணைகளை நடத்துகின்றனர். ஆனால் ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் சுங்க அதிகாரி, போதைப்பொருளை பரிசோதனை செய்த அதிகாரியையாவது இதுவரை விசாரணை செய்யவில்லை.
அதனால் அரசாங்கம் அதை மறைக்க முயற்சித்துள்ளது. நாடாளுமன்றில் நாமல் ராஜபக்ச கேள்வி கேட்கும் வரை, அமைச்சர் ஆனந்த விஜேபால ஒன்றும் சொல்லவில்லை.
கொள்கலன் வெளியில் சென்றது தொழில்நுட்ப கோளாறு என்றார். புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் இவ்வாறு நடந்துள்ளது என்றால் அரசாங்கம் பின்புலத்தில் செயற்பட்டுள்ளமை தெளிவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri