மேர்வின் சில்வாவிற்கு எதிரான காணி மோசடி வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள காணி மோசடி வழக்கு குறித்து நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் சட்ட ஆலோசனை கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வழக்கினை எதிர்வரும் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி வரை ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக மஹர நீதிமன்றில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை பரிசீலனை செய்த பிரதான நீதவான் லோச்சனி அபேவிக்கிரம வழக்கினை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காணி ஒன்றை தொடர்பில் போலி ஆவணங்களை தயாரித்ததாக அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவிர, களனி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் டாக்டர் ஜெயந்த சிங்கபாகு கப்ரால், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மில்ரோய் பெரேரா, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் அப்போதைய நாடாளுமன்ற செயலாளர் தொன் சரத்குமார எதிரிசிங்க எனப்படும் சிங்கப்பூர் சரத் மற்றும் நவீன் வீரகோன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மில்ரோய்யப் பெரேரா தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மில்ரோய் பெரேராவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri