அமைச்சரை நேரடி விவாதத்திற்கு அழைக்கும் மொட்டு கட்சி எம்.பி
நிலக்கரி இறக்குமதி டெண்டரில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சருக்கு மொட்டுக் கட்சி பகிரங்க சவால் விடுத்துள்ளது.
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாரிய அளவிலான நிலக்கரி ஊழல் குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் டி.வி. சானக எம்.பி வெளிப்படுத்தினார்.
நடைபெற்ற ஊழல்
அமைச்சர் ஜெயக்கொடி விவாத சவாலை ஏற்றுக்கொண்டால், தரமற்ற நிலக்கரி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதால் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.இது 'முற்றிலும் ஊழல் நிறைந்தது' என்பதை நிரூபிப்பதாகவும் அவர் கூறினார்.
கிடைக்கப் பெற்ற அறிக்கைகளின்படி, வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் வருடாந்த நிலக்கரி டெண்டர் இந்த ஆண்டு செப்டம்பர் வரை அரசு ஒத்திவைத்துள்ளது.
லக்விஜய மின் நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், டெண்டரின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதல் இரண்டு தொகுதி நிலக்கரியின் கலோரி பிக் மதிப்பு 5,600 முதல் 5,800 வரை இருந்துள்ளது.

இது டெண்டர் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவான 5,900 மதிப்பை விடக் குறைவானதாகும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் நிலக்கரி இறக்குமதி செயல்முறையின் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.