இலங்கைக்கு சென்றால் ஆபத்து : இலங்கையரை தடுப்புக்காவலில் இருந்து விடுவித்த சைப்பிரஸ் நீதிமன்றம்
சைப்பிரஸின் (Cyprus) உயர்நீதிமன்றம், இலங்கையர் ஒருவரை உடனடியாக தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
அவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டால், சித்திரவதைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை எடுத்துக்காட்டியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும் ஆபத்து காரணமாக அவரை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என்ற புகலிட சேவையினர் வழங்கிய சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட சைப்பிரஸின் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் விவரிக்கப்பட்டுள்ள வழக்கு, 2017 ஆம் ஆண்டுக்கு முன்னரானது, அந்த நபர் சைப்பிரஸில் தனது குடியிருப்பு மற்றும் பணி அனுமதியைப் புதுப்பிக்க விண்ணப்பித்தபோது, அது வழங்கப்பட்டது.
இருப்பினும், 2018ஆம் ஆண்டு பெப்ரவரியில்; தாக்கல் செய்யப்பட்ட அவரது புகலிட விண்ணப்பம் 2020 இல் புகலிட சேவையால் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து 2020இல் அவர், சர்வதேச பாதுகாப்பு நிர்வாக நீதிமன்றத்தில் தீர்ப்பை மேன்முறையீடு செய்தார்.
ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது புகலிட விண்ணப்பமும் ஜனவரி 2023 இல் நிராகரிக்கப்பட்டது,
அத்துடன் 2023 மார்சிலும் மற்றொரு மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில் 2025 ஜனவரி 5ஆம் திகதியன்று, குறித்த இலங்கையர், நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு, சட்டவிரோத குடியேறிகளுக்கான தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டார்.
நாடுகடத்தல் உத்தரவுகள்
அவரது காவலில் இருந்தபோது, தாம் ஏன் இலங்கைக்கு திரும்பவில்லை என்பதை அவர் தெளிவுப்படுத்தினார். ஆனால் 2024 ஜனவரி 6 ஆம் திகதியன்று அவருக்கு தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்தநிலையில் அவர் இலங்கைக்குத் திரும்புமாறு வழங்கப்பட்ட முடிவை அவர் பின்பற்ற மறுத்ததால், அவரை காவலில் வைத்திருப்பது மட்டுமே ஒரே வழி என்று அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதனையடுத்து 2024 ஜனவரி 15ஆம் திகதியன்று, குறித்த இலங்கையர், ஒரு புதிய புகலிட விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.
எனினும் 2024 பெப்ரவரி 22 இல் அதிகாரிகள் மற்றொரு தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தல் உத்தரவை அவருக்கு எதிராக பிறப்பித்தனர்.
அத்துடன் 2024 ஆகஸ்ட் மாதத்தில், அவரின் புகலிட விண்ணப்பம் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
இலங்கைக்கு திருப்பி அனுப்புவது
இருப்பினும் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது சித்திரவதைக்கு ஆளாக்கும் என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
இந்தநிலையில், தனது மேன்முறையீட்டில், கீழ் நீதிமன்றம் முக்கியமான புதிய உண்மைகளைக் கருத்தில் கொள்ளத் தவறியதால், அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று அந்த இலங்கையர் வாதிட்டார்.
நீதிமன்றம் சட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டதாகவும், அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணங்கள் இனி பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த உண்மைகளை ஆராய்ந்த சைப்பிரஸின் உயர்நீதிமன்றம், மனுதாரரான இலங்கையரை இலங்கைக்கு நாடு கடத்துவது அவரை கடுமையான ஆபத்துகளுக்கு ஆளாக்கும் என்ற புகலிட சேவையின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.
அத்துடன் அவரை தடு;ப்புக்காவலில் இருந்து விடுவிக்குமாறும் உத்தரவிடடுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |