கடந்த அரசாங்கங்களின் அமைதியை தகர்த்தெறிந்த அநுர தரப்பு! ஒரே சீனா கொள்கைக்கு பச்சைக் கொடி

Anura Kumara Dissanayaka Vijitha Herath Sri Lanka China Tibet
By Amal Jan 19, 2025 04:44 AM GMT
Report

ஜிசாங் என்ற திபெத் மற்றும் ஜின்ஜியாங் என்ற உய்குர் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவை ஆதரிக்கவும், இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே சீன கொள்கையுடன் இணைக்கவும் இலங்கையின் புதிய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

15 வயதில் இருந்தே அரச தலைவராக இருந்த பௌத்த மத ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின்  தாயகமான ஜிசாங் அல்லது திபெத், 1951ஆம் ஆண்டு சீனாவால் இணைக்கப்பட்டபோது, அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது! தர்மப்பிரிய திசாநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது! தர்மப்பிரிய திசாநாயக்க

இதனையடுத்து, 1965ஆம் ஆண்டில், ஜிசாங் என்ற திபெத் ஒரு தன்னாட்சிப் பகுதியாகவும், சீன மக்கள் குடியரசின் மாகாண அளவிலான பிரிவாகவும் மாற்றப்பட்டது.

ஒரே சீனா கொள்கை

இந்தநிலையில், திபெத் பிரச்சினையை ஒரே சீனா கொள்கையுடன் இணைக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு அறிக்கையின், இலங்கையின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கங்களின் அமைதியை தகர்த்தெறிந்த அநுர தரப்பு! ஒரே சீனா கொள்கைக்கு பச்சைக் கொடி | China Tibet Issue Sri Lanka S Intention

திபெத் சீனாவின் ஒரு பகுதி என்றும், சீனாவைப் பிரிக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சீனாவின் ஆட்சேபனைகள் காரணமாக, கண்டியின் புனித தந்தம் மற்றும் அனுராதபுரத்தின் ஸ்ரீ மகா போதி  ஆகியவற்றை வழிபட தலாய் லாமா விடுத்த வேண்டுகோளை, இலங்கை அரசாங்கங்கள் நிராகரித்தன.

ஆனால் திபெத்தின் அரசியல் நிலை குறித்து, இலங்கையின் முன்னைய அரசாங்கங்கள் அமைதியாகவும் உறுதியற்றதாகவும் இருந்தன.

சீனாவிற்கு எதிரான மேற்கத்திய சக்திகளின் ஆதரவைப் பெற்ற தலாய் லாமாவுக்கு, திபெத்தின் விடுதலைக்கான அவரது அகிம்சை போராட்டத்திற்காக 1989இல் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த வாரம் பீய்ஜிங்கில் இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இடையே நடந்த உச்சிமாநாட்டு அளவிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், "இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் முக்கிய நலன்கள் மற்றும் முக்கிய கவலைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பரஸ்பர ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இலங்கையின் ஆதரவு

இலங்கை, சீனாவின் ஒரே-சீனா கொள்கையை ஆதரிக்கிறது மற்றும் "தாய்வான் சுதந்திரத்தை" எதிர்க்கிறது. ஜிசாங் மற்றும் ஜின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகளில் இலங்கை சீனாவை "உறுதியாக ஆதரிக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கடந்த அரசாங்கங்களின் அமைதியை தகர்த்தெறிந்த அநுர தரப்பு! ஒரே சீனா கொள்கைக்கு பச்சைக் கொடி | China Tibet Issue Sri Lanka S Intention

இதன்மூலம் சீனா, தாய்வான் பிரச்சினையை திபெத் பிரச்சினையுடன் சமன்படுத்தி, அதை 'ஒரே சீனா கொள்கையின்' கீழ் கொண்டு வந்துள்ளது என்று இராஜதந்திர ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்னதாக திபெத் பிரச்சினையை இலங்கையுடனான கூட்டு அறிக்கைகளில் கொண்டு வருவதற்கான சீனாவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்தநிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டு நாடுகளுக்கான கூட்டறிக்கையில், திபெத் மற்றும் உய்குர் என்ற சொற்களுக்கான குறிப்புகளை கைவிட்டுள்ள சீனா, அவற்றுக்குப் பதிலாக ஜிசாங் மற்றும் ஜின்ஜியாங் என்ற பெயர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

ஜின்ஜியாங் என்பது பெரும்பாலும் முஸ்லிம் மாகாணமாகும், அங்கு உய்குர் பிரிவினைவாத குழுக்கள் பீய்ஜிங்கிலிருந்து சுதந்திரத்திற்காகப் போராடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் சீனாவுக்கான அரசமுறை விஜயத்திற்கு முன்னதாக, 'ஒரே சீனா' கொள்கையின் நீண்டகால நிலைப்பாட்டை இலங்கையின் அமைச்சரவை அங்கீகரித்திருந்தது.

எனினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன பயணத்துக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட 'ஒரே சீனா' கொள்கைக்கான அமைச்சரவை ஒப்புதலில் ஜிசாங் மற்றும் ஜின்ஜியாங் பற்றிய குறிப்புகள் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலில் முக்கிய திருப்பம்: சுமந்திரன் வெளியிட்ட தகவல்

உள்ளூராட்சி தேர்தலில் முக்கிய திருப்பம்: சுமந்திரன் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US