நான்காவது சிலிண்டர் வெடிப்பை அடுத்து எரிவாயுவின் தரத்தை மதிப்பிடும் அரசாங்கம்
இலங்கைக்குள் ஒரு மாதத்துக்குள் நான்காவது எரிவாயு சிலிண்டர் நேற்று கொட்டாவ பன்னிப்பிட்டிய பகுதியில் வெடித்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரத்தை மதிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தொிவித்துள்ளது.
கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.
எரிவாயுவின் தரம் குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்ளும் சர்வதேச ஆய்வு கூடங்கள் இதற்காக முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது நாட்டில் எரிவாயு சிலிண்டர்களின் கலவையை மதிப்பீடு செய்து வருகிறது.
மற்றுமொரு தனியார் நிறுவனமும் அத்தகைய மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண தெரிவித்தார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
