மொக்கா புயலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வங்க கடலில் உருவான மொக்கா புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.
மொக்கா புயல் கரையைக் கடந்தபோது பங்காளதேஷ், மியன்மாரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பங்காளதேஷின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடலோர பகுதிகள் புயலால் பாதிப்பை
இந்நிலையில் மியன்மாரின் கியெவுக்பியு நகர் உட்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
மேலும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
