அவிசாவளை மற்றும் ஹங்வெல்ல மக்களுக்கு அவசர அறிவிப்பு! உடனடியாக வெளியேறுங்கள்
அவிசாவளை மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
களனி ஆற்றின் நீர்மட்டம் மிக வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக அதனை அண்டி வாழும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
உடன் வெளியேறுங்கள்..
மேலும், கடுவெல, வத்தளை, வெள்ளம்பிட்டி உள்ளிட்ட களனி கங்கையை அண்டி வாழும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கிய இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

களனி கங்கையை அண்டிய தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அரசாங்கம் மற்றும் மீட்புப் படையினரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.