யாழ். மக்களே அவதானம்! அடுத்து வரும் மணித்தியாலங்கள் ஆபத்தானவை..
எதிர்வரும் சில மணித்தியாலங்களில் யாழ். மாவட்டத்தில் மிக அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாரியளவிலான உயிர் சேதங்களையும் இலங்கை சந்தித்து வரும்நிலையில், மிக அதிகளவான மக்கள் உதவிதேவைப்படும் நிலையில் உள்ளனர்.
இந்தநிலையில், எதிர்வரும் சில மணத்தியாலங்களில் யாழ். மாவட்டத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் யாழ். பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
“அடுத்து வரும் மணித்தியாலங்கள் மிக ஆபத்தானது, உங்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவதானமாக இருங்கள்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.