பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தயக்கம் காட்டும் மக்கள்! உடனடி ஒத்துழைப்பை கோரும் அரசாங்கம்
களனி கங்கையை அண்டி வாழும் ஆபத்தான நிலையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு தயக்கம் காட்டுவதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கடுவெல, கொழும்பு, கொலன்னாவை மற்றும் களனி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் இவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தயக்கம் காட்டுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர் மட்டம் அசாதாரணமாக உயரக்கூடும்
இது குறித்து அவர் இட்டுள்ள பதிவில்,
நீர் மட்டம் உயர்ந்தவுடன், படகு மூலம் மக்களை வெளியேற்றுவது மிகவும் கடினமாகவும் ஆபத்தானதாகவும் மாறும். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

கணிப்புகளின்படி, இன்றிரவு மிகக் குறுகிய காலத்திற்குள் நீர் மட்டம் அசாதாரணமாக உயரக்கூடும். பொதுமக்களிடமிருந்து உடனடி ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.