அர்னாப் புயல் கோரத்தாண்டவம் : இந்தியாவில் உயிரிழப்பு 9ஆக உயர்வு
அர்னாப் புயலினால் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரம் உள்ள பல பகுதிகளில் இன்று (29) குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்சாரம் தாக்கியதாலும், மரம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது எனத் தெரிவித்துள்ளது.
மக்கள் வெளியேற்றப்பட்டிருந்ததாக
இந்திய வானிலை ஆய்வு மையத்தால் மிகக் கடுமையான புயல் என வகைப்படுத்தப்பட்ட அர்னாப் புயல் புதன்கிழமை அதிகாலையில் ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடந்தது.

புயலால் குறைந்தது 15,000 மின் கம்பங்கள் சேதமடைந்ததாக மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோனசீம் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் வருவதற்கு முன்னதாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து 180,000இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவின் பிணை மனு விசாரணை: சர்ச்சையை கிளப்பியுள்ள அலி சப்ரியின் கருத்து - எழுப்பப்பட்டுள்ள கேள்வி