இணையப் பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்ய கோரிக்கை
இணையப் பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக ஆசிய இணையக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக இந்த சட்டமூல யோசனையில் விரிவான திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புகள் அவசியம் என்று உலகில் உள்ள இணையம், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆசிய இணையக் கூட்டமைப்பு இலங்கை அராசங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
முன்மொழிவுக்கான ஆய்வு
குறித்த சட்டமூல யோசனையின் அதன் உட்பிரிவுகளில் அடங்கியுள்ள ஒழுங்குமுறை சுதந்திரம் மற்றும் வெளிநாட்டிற்குப் புறம்பான பயன்பாடு முதல் இடைத்தரகர்களின் பரந்த வரையறை, தடைசெய்யப்பட்ட அறிக்கைகளை வரையறுக்கும் தெளிவற்ற சொற்கள், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிறந்த நடைமுறை தரநிலைகளில் இருந்து விலகல் போன்ற விடயங்களில் திருத்தங்கள் அவசியம் என்று ஆசிய அமைப்பு கோரியிருந்தது.
இந்நிலையிலேயே, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை தமது குழு ஆய்வு செய்து வருவதாகவும் அவற்றை உரிய முறையில் ஆய்வு செய்ததன் பின்னர் முடிந்தவரை மாற்றியமைக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த யோசனை தொடர்பில் இம்மாத இறுதியில் சபையில் விவாதம் மற்றும் சட்டமாக்கலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |