மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் சட்டமூலம்: சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கை
அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள உத்தேச இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் தற்போது உள்ள வடிவத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டால் மக்களின் வெளிப்படையான கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு வழிவகுக்கும் என சர்வதேச நீதித்துறை வல்லுநர்களின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தமக்கு கவலையளிப்பதாக சர்வதேச நீதித்துறை வல்லுநர்களின் ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் கொள்கைப் பணிப்பாளர் சீடர்மேன் தெரிவித்துள்ளார்.
அடிப்படை மனித உரிமை
குறித்த சட்டமூலத்தில் உள்ள பல விதிகள் தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமை சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உள்ளாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சட்டமூலம் அதன் வடிவமைப்பில் ஆழமான குறைபாடுகளை கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பான பொது விவாதத்தை அடக்குவதற்காக குறித்த சட்டம் பயன்படுத்தக் கூடிய அச்சம் நிலவுவதாகவும் சட்டம் மற்றும் கொள்கை பணிப்பாளர் சீடர்மேன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு கொழும்பு சென்று இரு இராஜதந்திரிகளை சந்தித்த நீதிபதி : விசாரணைகளில் அம்பலமான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
