உலகளாவிய கல்வித் தளம் கென்வாஸ் மீது சைபர் தாக்குதல்: மில்லியன் கணக்கான மாணவர்களின் தரவுகள் திருட்டு!
சுமார் 30 மில்லியன் மாணவர்கள் மற்றும் 9,000 கல்வி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் 'கென்வாஸ்' (Canvas) எனும் இணைய வழி கல்வித் தளம், சர்வதேச ஹெக்கர் குழுவின் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
'ஷைனி ஹண்டர்ஸ்' என்ற ஹெக்கர் குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், சுமார் 3.5 டெராபைட் (TB) அளவிலான மாணவர்களின் தனிப்பட்ட தரவுகளைத் திருடியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதில் மாணவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், அடையாள எண்கள் மற்றும் தனிப்பட்ட செய்திகள் அடங்கும். எதிர்வரும் மே 12ஆம் திகதிக்குள் கேட்கப்பட்ட தொகை வழங்கப்படாவிட்டால், இந்தத் தரவுகள் பகிரங்கமாக வெளியிடப்படும் என ஹெக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இறுதித்தேர்வு
அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இந்தத் தளத்தின் சேவை முடங்கியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

குறிப்பாக ஹார்வர்ட், ஜார்ஜ்டவுன் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இறுதித்தேர்வு சமயம் என்பதால், தேர்வுக் காலக்கெடுவை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்தத் தளம் பெரும்பாலான பயனர்களுக்கு மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக 'இன்ஸ்ட்ரக்சர்' நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பாதுகாப்புச் சோதனைகள் காரணமாக சிட்னி பல்கலைக்கழகம் போன்ற சில நிறுவனங்கள் இன்னும் முழுமையான அணுகலை வழங்கவில்லை.
இந்தச் சம்பவம் கல்வி நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam