சி.வி.கே. சிவஞானம் - சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

M. A. Sumanthiran ITAK
By Rakesh Jun 19, 2026 07:14 AM GMT
Report

வழக்கு ஒன்று தொடர்பில் ஆட்சேபனை கிளப்பியமை சம்பந்தமாக, செலவுத் தொகையாக தலா 10 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், மேற்படி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையையும் இடைநிறுத்தி வைக்க, யாழ்ப்பாணத்தில் இயங்கும் சிவில் மேன்முறையீட்டுக்கான மேல்நீதிமன்றம் நேற்று(18)உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் - குற்றவாளிகளை இலக்கு வைக்கும் அரசாங்கம்

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் - குற்றவாளிகளை இலக்கு வைக்கும் அரசாங்கம்

செலவுத் தொகை 

நீதிபதிகளான இராமக்கமலன், றிஸ்வி ஆகியோரைக் கொண்ட ஆயமே இந்த உத்தரவை விடுத்துள்ளது.

வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரன், பிரதேச சபைத் தவிசாளர் தெரிவின் போது கட்சிக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தி கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் அவருக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.

சி.வி.கே. சிவஞானம் - சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை | Cvk Sumandranai To Pay The Expenses Ban The Order

அந்த உத்தரவை ஆட்சேபித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகிய தரப்பினரை எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டு இராசேந்திரன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட்டிணைக்கப்படாத நிறுவனம் என்பதால், அதனை ஒரு சட்டபூர்வமான ஆளாகக் கருதி அதற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்குத் தொடர வேண்டுமாயின் அதன் தலைவர் மற்றும் பொதுச்செயலாளரின் பெயர்களைக் குறிப்பிட்டு, பத்திரிகை மூலம் பகிரங்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என சிவில் நடவடிக்கைச் சட்டக் கோவை வலியுறுத்தினாலும், மனுதாரர் அதனை மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது என மாவட்ட நீதிமன்றத்தில் எதிர்மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சி.வி.கே. சிவஞானம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் சார்பில் பூர்வாங்க ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் அவரது மனைவி கூறும் அதிர்ச்சி தகவல்கள்..

சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் அவரது மனைவி கூறும் அதிர்ச்சி தகவல்கள்..

நீதிமன்றம் ஒத்திவைப்பு

அந்த ஆட்சேபனையை நிராகரித்த யாழ். மாவட்ட நீதிமன்றம், ஆட்சேபனையைக் கிளப்பியமையால் ஏற்பட்ட செலவுத் தொகையாக மனுதாரருக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்கும்படி எதிர்மனுதாரர்களான சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை ஆட்சேபித்து அவர்கள் இருவரும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்த சிவில் மேன்முறையீட்டுக்கான மேல்நீதிமன்றம் மேற்படி மாவட்ட நீதிமன்றத்தின் செலவுத் தொகை தொடர்பான கட்டளையையும் அந்த வழக்கு விசாரணையையும் இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்தது.

சி.வி.கே. சிவஞானம் - சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை | Cvk Sumandranai To Pay The Expenses Ban The Order

இந்த மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் முடிவு செய்வதற்காக வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 25ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இன்றைய வழக்கின் போது சுமந்திரன் தம் சார்பில் தாமே முன்னிலையாகி வாதாடினார். சி.வி.கே.சிவஞானம் சார்பில் சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜாவும், இராசேந்திரன் சார்பில் சட்டத்தரணி சுபாஸ்கரனும் முன்னிலையாகினர்.

உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்

உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US