இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு - கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும்: சி.வி.கே. வலியுறுத்தல்

Ilankai Tamil Arasu Kachchi Eastern Province Northern Province of Sri Lanka
By Rakesh May 03, 2025 05:06 AM GMT
Report

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள ஒரேயொரு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு வருகைத்தந்த பேருந்துகள் தொடர்பில் விசாரணை

தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு வருகைத்தந்த பேருந்துகள் தொடர்பில் விசாரணை

வடக்கு, கிழக்கில் சிங்கள கட்சிகள் போட்டி

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியைக் குறிவைத்து விமர்சித்து வருவதை நாம் அவதானித்துக் கொண்டுதான் வருகின்றோம். எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறுகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு - கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும்: சி.வி.கே. வலியுறுத்தல் | Cvk Sivaganam Statement

இந்தத் தேர்தலில் தெற்கத்தேய சிங்கள ஏகாதிபத்திய கட்சிகள் வடக்கு, கிழக்கில் போட்டி போடுகின்றன. இவ்வாறான தெற்கத்தேய இனவாத சிங்களக் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

இனவாதக் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கும் தமிழர் தாயகத்தில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் ஆரம்பம் முதலே கூறிவந்தவன் நான். அத்துடன் சிங்களத் தேசிய கட்சிகளை முற்றுமுழுதாக நிராகரித்து தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் ஆரம்பம் முதல் நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.

அந்தவகையில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் 58 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை நாடாளுமன்றத் தேர்தல்களில் 1956 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தக்க வைத்து வரும் ஒரேயொரு கட்சி என்ற வகையிலும் இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப் பேரைக் கொண்ட பெருமைக்குரிய ஒரேயொரு கட்சி என்ற வகையிலும் இந்தக் கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தரை கொலை செய்த நபர்

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தரை கொலை செய்த நபர்

அறிவுள்ளவர்கள் உறுப்பினர்களாக வர வேண்டும்

உள்ளூராட்சி சபைகளில் அனுபவம் மற்றும் அந்தத் துறைசார்ந்த அறிவுள்ளவர்கள் உறுப்பினர்களாக வர வேண்டும். அப்போதுதான் அந்தச் சபை வினைத்திறன் மிக்கதாக அமையும். அவ்வாறான தகமையுள்ளவர்கள் உள்ள ஒரேயொரு கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியே உள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அந்தந்தக் குடியிருப்பாளர்களுடன் அதே ஊரில் வாழ்ந்து அந்தப் பகுதி மக்களின் தேவைகளை நேரடியாக உணர்ந்தவர்களே உண்மையான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள். அவ்வாறான உறுப்பினர்களே எமது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் வேட்பாளர்களாக உள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு - கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும்: சி.வி.கே. வலியுறுத்தல் | Cvk Sivaganam Statement

மக்களின் நில உரிமை தொடர்பில் தொடர்ச்சியாக நாம் குரல் கொடுத்து வருகின்றோம். மயிலிட்டி பகுதியில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட விகாரை சட்டவிரோதமானது என நாம் வெளிப்படையாகக் கூறுகின்றோம். எனினும், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சட்டவிரோத விகாரை என்று கூறுவார்களா? சிங்கள இனவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக விளங்கும் இவர்களால் தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோத விகாரை எனக் கூற முடியாது.

எனவே, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள ஒரேயொரு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்துக்குப் போட்டியாக இந்தியாவின் விழிஞ்சம் துறைமுகம்

கொழும்புத் துறைமுகத்துக்குப் போட்டியாக இந்தியாவின் விழிஞ்சம் துறைமுகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US