சிறுபான்மையினரின் நீதிபதியினை மத்திய பெரும்பான்மையினர் அடக்குகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்
தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்க முடியாமல் போய்விடும் என்பதற்காகவே நீதிபதியினை மத்திய பெரும்பான்மையினர் அடக்குகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் ஒய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்டதற்கு நீதி வழங்ககோரி இன்று (04.10.2023) யாழ்ப்பாணம் - மருதனார் மடத்தில் இருந்து யாழ்ப்பாண நகர் வரை இடம்பெற்ற சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தனிப்பட்ட ரீதியாக அச்சுறுத்தல்
நீதிபதிகளின் தீர்ப்புக்கள் பிழையாக இருக்கும் பட்சத்தில் அதனை மேல் நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம். அதனை விடுத்து தனிப்பட்ட ரீதியாக அச்சுறுத்தல் செய்வது அது நீதித்துறைக்கும் ஆகாது.

நாட்டின் வருங்காலத்தினை பாதிக்கும்.
சிறுபான்மையினரின் நீதிபதியினை இவ்வாறு அச்சுறுத்துவது சிறுபான்மையினம்
சம்பந்தமான உண்மையான சரியான தீர்ப்புக்களை கொடுக்க முடியாமல் போய்விடும்.
தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்கமுடியாமல் போய்விடும். இவ்வாறு அச்சுறுத்துவது பெரும்பான்மையினரின் அடக்குமுறையினை காட்டுகின்றது.
அரசாங்கம் இதனை உரியவகையில் நிறுத்தவேண்டும் என்பதுடன் இதற்கு சரியான முறையில் தீர்ப்புக்களை வழங்கவேண்டும் என தெரிவித்தார்.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam