மக்களின் காணிகளில் அனுமதியின்றி வேப்பமரம் தறிப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி, அல்வாய் கிழக்கு பகுதியில் வீதி அமைத்தல் பணிகளுக்காக தனியாருக்கு சொந்தமான காணிகளிலிருந்த மூன்று வேப்பமரங்கள் தறிக்கப்பட்டமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு சொந்தமான j 380 அல்வாய் கிழக்கு குழுழடி வெள்ளவாய்க்கால் வீதி புனரமைப்பு செய்வதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வீதியில் வீதி போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவுள்ள மரங்களை அகற்றாது மிகவும் பெறுமதி வாய்ந்த மூன்று வேப்பமரங்கள் தறிக்கப்பட்டுள்ளதாக காணிகளுக்கு சொந்தக்காரர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாரிகாலத்திலும் மண்ணரிப்பு ஏற்படுவதாகவும் இதனால் தமது காணி வேலிகளை வருடாந்தம் பின்னோக்கி நகர்த்தவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரை தொடர்புகொண்டு கேட்டபோது, அது பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என்றும் வீதி ஓரங்களிலுள்ள மரங்களை அகற்றுவதற்கு தமக்கு அதிகாரம் உண்டு என்றும் தெரிவித்தனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
