இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் தற்போதைய நிலைப்பாடு

BJP Narendra Modi India
By Rukshy Jun 05, 2024 10:20 AM GMT
Report

இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிப்பதோடு இன்று நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன் என்று கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை சந்திரபாபு நாயுடு ( Chandrababu Naidu) தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளதோடு ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

அமராவதியில் வரும் 9ஆம் திகதி சந்திரபாபு நாயுடு 4-ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

வெளியாகியுள்ள இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் : சபாநாயகர் பதவியை குறிவைக்கும் இரு கட்சிகள்

வெளியாகியுள்ள இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் : சபாநாயகர் பதவியை குறிவைக்கும் இரு கட்சிகள்

அரசியல் மாற்றங்கள் 

மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்படி 160இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 

current-position-national-democratic-alliance

வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

இதில், "எனக்கும் அனுபவங்கள் உள்ளன. நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களை கண்டுள்ளேன். இது மாதிரியான சிறப்பு தேர்தலை பார்த்தது இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன். இன்று நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். 

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா இணைந்து பணியாற்றியதால் தான் இந்த வெற்றி கிடைத்தது. ஜனசேனா தலைவர் பவன் கல்யாணுக்கும், பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எனது நன்றிகள்.

 தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கும் எனது நன்றி. என் வாழ்நாளில் இதுபோன்று சிறப்புமிக்க தேர்தலை கண்டதில்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்துக்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

தனிப்பெரும்பான்மை

மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனித்து தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. 

current-position-national-democratic-alliance

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனை தொடர்ந்தே இவர்களின் ஆதரவுடன் மத்தியில் 3ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் சந்திரபாபு நாயுடுவை இழுக்க முயற்சி நடந்துவருவதாக பேச்சுக்கள் வெளியானது. எனினும், தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிப்பதாக கூறி தனது சந்திரபாபு நாயுடுநிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். 

நாடாளுமன்றில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த சஜித்

நாடாளுமன்றில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த சஜித்

மத்தியில் தீவிர ஆலோசனை நடத்தும் கூட்டணிகள்: சூடுபிடிக்கும் டெல்லியின் அரசியல் களம்

மத்தியில் தீவிர ஆலோசனை நடத்தும் கூட்டணிகள்: சூடுபிடிக்கும் டெல்லியின் அரசியல் களம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US