மத்தியில் தீவிர ஆலோசனை நடத்தும் கூட்டணிகள்: சூடுபிடிக்கும் டெல்லியின் அரசியல் களம்
நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மற்றும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி சார்பில் தனித்தனியே தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290இற்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234இற்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக கட்சி 240 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
சூடுபிடித்த அரசியல் களம்
அந்த வகையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல்தான் உருவாகி இருக்கிறது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் தனித்தனியே தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு, அடுத்தடுத்த நடவடிக்கைகள் காரணமாக டெல்லியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவ சேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு கருத்து
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றுள்ளார்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேஜஸ்வி யாதவ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் அந்தந்த கூட்டணி சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரே விமானத்தில் டெல்லி புறப்பட்டனர்.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம் எனவும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக உள்ளேன் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ராகுல்காந்தி பிரதமராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |