இலங்கை அரசியல்வாதிகளின் வாழ்த்துக்களுக்கு நன்றி வெளியிட்ட நரேந்திர மோடி
இந்தியப் (India) பொதுத் தேர்தலில் தமது கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தமது எக்ஸ் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் அத்துடன் தனது வெற்றியைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான உறவுகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து அனுப்பப்பட்ட செய்திக்கு பதிலளித்த மோடி, இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டுறவில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சஜித் பிரேமதாச. இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் சிறப்பானவை மற்றும் தனித்துவமான சகோதரத்துவமானவை.

எங்கள் அண்டை நாடு முதல் கொள்கைக்கு இணங்க பிரிக்க முடியாத பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று சஜித் பிரேமதாசா அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு மோடி பதிலளித்தார்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே ராஜபக்ச. இந்தியா-இலங்கை கூட்டாண்மைக்கு உங்களின் தொடர்ந்த ஆதரவை எதிர்பார்கிறோம் என்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செய்திக்கு மோடி பதிலளித்துள்ளார்.
இலங்கையுடனான எமது உறவுகள் விசேடமானவை. இலங்கையை மேலும் ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் செய்திக்கு மோடி பதில் வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan