மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்: ஆட்சி தொடர்பில் புதிய வியூகம்
நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி இன்று காலை 11.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் ஏமாற்றம்
400 இடங்களை வெல்வோம் என்ற கோஷத்துடன் பிரசாரத்தை தொடங்கிய பாஜகவிற்கு லோக்சபா தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளன.
இந்நிலையில், தனி பெரும்பான்மையை பெற முடியாமல் கூட்டணி ஆட்சியையே பாஜக இந்த முறை அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
மறுபக்கம் இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகளும் ஆட்சி அமைப்பது தொடர்பாக வியூகம் அமைக்க போவதாக காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.
எதிர்பார்ப்பு மிக்க தலைவர்கள்
இத்தகைய சூழலில் மோடி தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது உள்ளிட்டவை தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் தற்போது எதிர்பார்ப்பு மிக்கவர்களாக உருவெடுத்துள்ளனர்.
இதனால் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |