இலங்கைக்குள் நுழையும் இந்திய புலனாய்வு அமைப்பின் நோக்கம் அம்பலம்
இலங்கையினால் இந்தியாவிற்கு ஆபத்து உள்ளதாக அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் இந்திய புலனாய்வு அமைப்பு தனது பாதுகாப்பிற்காக இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து தீவிரவாதத்தினை உருவாக்கி இந்தியாவிற்கு அனுப்புவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியா தனது பாதுகாப்பிற்காக இந்திய புலனாய்வு துறையினர் இலங்கைக்கு வந்துச்செல்லும் வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு தற்போது சுமுகமாக இல்லாத நிலையில், இந்தியாவிற்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையை தனது கண்காணிப்பில் வைத்திருக்க முற்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தியாவின் சூழ்ச்சியினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரட்ன அறிக்கையொன்றினை வெளியிட்டு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
