பின்தங்கிய கிராமத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இரு சகோதரிகள்
வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை(G.C.E A/L) பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் இரு சகோதரிகள் விஞ்ஞான பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி(Kilinochchi) - கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவரே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.
சிறந்த பெறுபேறு
பின்தங்கிய கிராமமான உழவனூர் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வறுமையான சூழ்நிலையிலும் தனது தந்தையின் தனி உழைப்பை மட்டும் வைத்து தமது கல்வியை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர்.

குறித்த மாணவிகளின் தந்தை லொத்தர் சீட்டுக்கள் விற்பனை செய்பவர் என்ற நிலையில், அவரது தனி வருமானத்தை கொண்டு தம்மை கல்வி பயில வைத்ததாகவும், சுமார் 5 கிலோமீற்றர் சென்று தர்மபுரம் மகா வித்தியாலயத்திலேயே தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri