வெளிநாட்டு பணத்தில் அபிவிருத்தி செய்த வீதியின் நிலை

Mullaitivu Government Of Sri Lanka Northern Province of Sri Lanka
By Keethan Oct 12, 2024 10:52 AM GMT
Report

வடக்கில் உள்ள முதன்மை வீதிகள் பல வெளிநாடுகளிடம் கடன்பெற்று செய்யப்பட்ட அபிவிருத்தி பணியாக காணப்படுகின்றன.

இன்றும் இந்த கடனுக்கான வட்டிகளை இலங்கை அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டியதாக காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் - வெள்ளாங்குளம் வீதியானது டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றி செல்லுவதால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு செல்லும் வீதியாக இந்த வீதி காணப்படுகின்றது.

யாழில் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரு ஆசிரியர்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழில் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரு ஆசிரியர்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

கனரக வாகன பயன்பாடு

இந்த வீதியில் வெள்ளாங்குளம் சந்தியில் இருந்து மாங்குளம் நோக்கி செல்லும் பகுதியில் கணேசபுரம் வரையான சுமார் 8 கிலோமீற்றர் தூரத்திற்கு கனரக வாகனங்கள் (டிப்பர்) பயன்படுத்தப்பட்டு குறித்த பகுதியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு மணல், கிரவல்கள் ஏற்றபட்டு வருகின்றன. இவ்வாறு கனரக வாகன பயன்பாட்டினால் இந்த வீதி மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது.

இது வீதியின் அபிவிருத்தியில் ஏற்பட்ட பிழையா அல்லது கனரக வாகனங்களின் பயன்பாட்டில் ஏற்பட்ட சேதமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. வடக்கில், குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து அதிகளான இயற்கை வளங்களான மணல், கிரவல், மரங்கள் போன்றவை யாழப்பாணத்திற்கு ஏற்றப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு பணத்தில் அபிவிருத்தி செய்த வீதியின் நிலை | Current Condition Of A Road In Mullaitivu

மன்னார் மாவட்டத்தின் எல்லைப்பகுதி ஒன்றில் வெள்ளாங்குளம் - துணுக்காய் வீதியில் ஒரு பகுதியில் கனியவளத் திணைக்களத்தினரால் மணல் அகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்டு நாள் ஒன்றிற்கு அதிகளவான டிப்பர்களில் இவை ஏற்றிச்செல்லப்படுகின்றன.

இவ்வாறு இந்த டிப்பர்கள் பயணிக்கும் இந்த பாதை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படுகின்றது. மன்னார்-வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அசமந்த போக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் B269 வீதியானது மாங்குளம் பகுதியில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கல்விளான் வரையும் சரியாக காணப்பட்டாலும் மன்னார் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் காணப்டும் வீதியில் டிப்பர் வாகனங்களை பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியால் செல்லும் டிப்பர்களால் வீதி முற்றாக சிதைவடைந்த நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இயற்கை வளங்கள்

இலங்கை அரசாங்கம் இன்றும் வெளிநாட்டு கடனினை திருப்பி செலுத்த வேண்டிய நிலை காணப்பட்டாலும் அபிவிருத்தி பணிகளுக்கு சேதம் ஏற்படுத்தும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

கனரக வாகனங்களால் வீதி சேதமடையும் அதேவேளை, மறுபக்கத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

வெளிநாட்டு பணத்தில் அபிவிருத்தி செய்த வீதியின் நிலை | Current Condition Of A Road In Mullaitivu  

மணல் அகழ்விற்கு அனுமதி கொடுக்கும் திணைக்களங்கள், வாகனங்களின் வீதி போக்குவரத்திற்கான வழித்தடத்தினை அறிந்து அந்த வீதிகளின் நிலையினை உணர்ந்து அதனால் என்ன நன்மை, தீமைகள் உள்ளன என்பதை அறிந்து அதற்கான அனுமதிகளை கொடுக்கவேண்டும்.

இவ்வாறு வடக்கில் யாழ்ப்பாணத்தினை தலைமையாக கொண்டு செயற்படும் சில திணைக்கள அதிகாரிகள் வன்னியில் இயங்கை வளங்களை சுறண்டுவதற்கான அனுமதியினை வழங்கிவருகின்றார்கள். இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிராம மக்களுக்கு என்ன நன்மை, தீமை என்பவற்றினையும் ஆராய்ந்து பார்த்து அனுமதி வழங்கவேண்டும்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் கனரக இயந்திரம் கொண்டு மணல் அகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரவல் அகழ்விற்கும் மணல் அகழ்விற்குமான அனுமதிகள் மற்றும் கருங்கல் அகழ்விற்குமான அனுமதிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளன.

சமூக அக்கறையாளர்களின் கருத்து

இதனால் பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு பாரிய கிடங்குகள் தோண்டப்பட்டு இயற்கை வளச் சமநிலை அழிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

உதாரணமாக கொக்காவில் கிரவல் அகழ்வு, களிக்காடு கிரவல் அகழ்வு, ஒட்டுசுட்டான் கருங்கல் அகழ்வு ஆகியவை அந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கும் கிராமத்திற்கும் எந்த நன்மையும் பயக்கவில்லை. மாறாக வளங்கள் அழிக்கப்பட்ட நிலையினையே இன்று உணரமுடிகின்றது.

வெளிநாட்டு பணத்தில் அபிவிருத்தி செய்த வீதியின் நிலை | Current Condition Of A Road In Mullaitivu

போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அபிவிருத்திக்காக கிரவல் அகழ்விற்கும் மணல் அகழ்விற்கும் சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் அனுமதி வழங்கியதால் பல ஏக்கர் பரப்பு கொண்ட இடங்கள் குழிதோண்டி சுரங்கங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் மாற்றப்பட வேண்டும். மக்களின் இலகுவான போக்குவரத்து வசதியான வீதிகள் பல கோடி பெறுமதியில் புனரமைப்பு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டாலும் அதனை பல இலட்சம் ரூபா பணம் செலவு செய்து அந்தந்த திணைக்களங்கள் பராமரித்து வருகின்றன.

ஆனால், பொறுப்பற்ற சில திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டினால் இவ்வாறான அபிவிருத்தி செய்யப்பட்ட பணிகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில், வழங்கப்பட்ட அனுமதிகளை பகுப்பாய்வு செய்து வழங்கவேண்டும் என்பது சமூக அக்கறையாளர்களின் கருத்தாக அமைகின்றது. 

முக்கிய அரசியல்வாதிகள் பலரின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டிய அநுரவின் வெற்றி

முக்கிய அரசியல்வாதிகள் பலரின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டிய அநுரவின் வெற்றி

கொழும்பிலுள்ள அலரி மாளிகைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கொழும்பிலுள்ள அலரி மாளிகைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US