மஹர சிறைச்சாலை பதற்றநிலை! பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்
புதிய இணைப்பு
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையை சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அமைதியை பேணுவதற்காக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப்பொலிஸ் அத்தியாட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
மஹர சிறைச்சாலை பதற்றநிலை காரணமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ளது.
மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ராகம பொலிஸ் பிரிவில் நேற்று இரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வெளியாகும் வரை ஊரடங்கு உத்தரவு
மறு அறிவிப்பு வெளியாகும் வரையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும் பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அப்பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அவசர தேவைகள் இருப்பின் அருகிலிருக்கும் பொலிஸ் பிரிவை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மஹர சிறையில் நிலவிய பதற்றமான சூழல் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து கைதிகளையும் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri