மஹர சிறைச்சாலை நிலவரம்.. நீதி அமைச்சருக்கு அவசர கடிதம்
மஹர சிறைச்சாலைக் கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மஹர சிறைச்சாலைக்குள் உடனடியாக உட்பிரவேசிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPRP) இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
குறித்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மஹர சிறையில் மிகவும் கடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பல கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
உடனடி தலையீடு
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், காயமடைந்தவர்களுக்கு உதவ மற்ற கைதிகள் வருவதைத் தடுப்பதாலும், நிலைமை மிகவும் கடுமையானதாகவும் மனிதாபிமானமற்றதாகவும் உள்ளது என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

நிலைமையைக் கட்டுப்படுத்தவும் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும் வளாகத்திற்குள் நுழைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருப்பதால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒரு குழுவை எவ்வித தாமதமுமின்றி மஹர சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அக்குழு கோருகிறது.
கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு, இது தொடர்பாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், சிறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுக்கிறது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri