யாழில் சுதந்திரதின நிகழ்வில் பண்பாட்டு அணிவகுப்பு நிகழ்வு
யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் நேற்றைய தினம் (11.02.2023) காலை ஜனாதிபதியால் திறந்து வைத்த நிலையில், மாலை இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வின் ஒரு பகுதியாக அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடக்கில் உள்ள 5 மாவட்டங்களையூம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பண்பாட்டு ஊர்திப் பேரணியும் மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு
யாழில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் அரசியல் கட்சிகள், சமூக ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




