யாழில் இடம்பெற்ற மாவட்ட பண்பாட்டு விழா
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், யாழ். மாவட்ட பண்பாட்டுப் பேரவை மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தின் இணைந்த ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் பண்பாட்டு விழா ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இன்று (30.01.2024) இந்த விழா நடைபெற்றுள்ளது.
மேலும், குறித்த விழாவில், யாழ்ப்பாண குழல் ஓசை, சிறுவர் நடனம், கும்மியாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், இஸ்ஸாமிய நடனம், பொய்க்கால் குதிரையாட்டம் மற்றும் மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
வழங்கப்பட்ட விருதுகள்
அதேவேளை, இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்து கொண்டதுடன் விருதுகளையும் வழங்கி வைத்துள்ளார்.
கலை பண்பாட்டில் மிகச்சிறந்த ஆற்றலை 07 வருடகாலமாக வெளிப்படுத்திய 15 பேருக்கு யாழ் முத்து விருதும், கடந்த இரண்டு வருடங்களாக கலைத்துறைக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்த 12 நபர்களுக்கு இளம் கலைஞர்கள் விருதும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |