வெயில் காலத்தில் மக்களின் விருப்பமாக மாறியுள்ள பழம்! அதிகரிக்கும் விற்பனை
இலங்கையை பொறுத்தவரை தற்போது பல பகுதிகளில் மழை பெய்துவரும் அதேவேளை இன்னும் சில பகுதிகளில் வெயிலின் தாக்கமும் வெப்பமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் ஊஷ்ணத்தை தவிர்ப்பதற்காக வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளை சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் விற்பனை
இந்நிலையில் சித்திரை புத்தாண்டு தினத்திலும் வெள்ளரிப்பழத்தினை பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்துள்ளனர்.
அத்துடன், உடல் வெப்பத்தை போக்கும் விதமாக பொதுமக்கள் வர்த்தக பழம், இளநீர் ,தோடை ,திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் போன்ற பழவகைகளை அதிகம் கொள்வனவு செய்த்துள்ளதுடன் குளிர்பான விற்பனை நிலையங்களையும் அதிகமாக நாடிச் செல்வதனையும் காண முடிகின்றது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.
வெயில் காலம்
சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதிக வெப்பம் காரணமாக வெள்ளரிப்பழத்திற்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் 250 ரூபாய் முதல் சுமார் 850 ரூபாய் வரை இவ் வெள்ளரிப்பழம் சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பெரும்பாலும் வெப்பமான காலங்களிலேயே வெள்ளரிப்பழம் அதிகமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இவைகள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.








அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
