தோனியின் ஓய்வு! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
மகேந்திர சிங் தோனி 2026ஆம் ஆண்டு ஐபிஎல்லில் விளையாடுவார் என்று சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தோனியின் அறிவிப்பு
தல' எம்.எஸ். தோனி ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்பு ஓய்வு பெறப்போகிறாரா? அல்லது அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவாரா? என்ற கேள்விகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமூகவலைத்தளமொன்றில் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதனிடம் குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று கேட்டக்கப்பட்ட போது நான் அவரிடம் கேட்டுவிட்டு வந்து உங்களுக்குச் சொல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
44 வயதான தோனி, ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாகக் கருதப்படுகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதர்சன நாயகனாகவும், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப்புக்கு அணியை வழிநடத்திய தலைசிறந்த அணித்தலைவராகவும் உள்ளார்.
அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு,
அவரிம் கடந்த ஐபிஎல் சீசன் முடிவடைந்தபோது, ஓய்வு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி தனது முடிவு எதையும் தெரிவிக்காமலே இருந்தார். "ஓய்வு குறித்து யோசிக்க எனக்கு 4-5 மாதங்கள் உள்ளன" என்று அவர் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், சிஇஓ விஸ்வநாதனின் இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, தோனியை ஐபிஎல் 2026 சீசனில் மீண்டும் களத்தில் காண முடியும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.
ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்களுக்கு அவர் வழி விட்டிருந்தாலும், தோனியின் பங்களிப்பு, அவரது ஆட்டத் திறமை மற்றும் ஃபினிஷிங் ஆகியவை தற்போதும் சென்னை அணிக்கு மிக முக்கியமாக உள்ளது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam