உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி! - இலங்கையில் விலை குறைப்பில்லை
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நஷ்டம் காரணமாக எரிபொருள் விலையை குறைக்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைன் - ரஷ்யா இடையே போர் வெடித்துள்ள நிலையில், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது. இதனால் இலங்கையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து வகையான எரிபொருளின் விலை சடுதியாக உயர்வடைந்தது.
அத்துடன், எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை 100 டொலர் வரை குறைந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.