தீகவாபியில் பயிர்ச்செய்கைகள் நாசம்: நெல் வயல்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்
அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட பல ஏக்கர் நெல் வயல்கள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாகச் சேதமடைந்துள்ளன.
இரவு வேளையில் காட்டுப் பகுதியிலிருந்து கிராமத்திற்குள் புகும் காட்டு யானைக் கூட்டங்கள், அறுவடைக்குத் தயாராகவுள்ள பயிர்ச் செய்கைகளுக்குள் புகுந்து நெற்பயிர்களை உட்கொண்டதுடன், அவற்றை மிதித்து நாசப்படுத்தியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக நடவடிக்கை
வங்கிக் கடன்களைப் பெற்றுப் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கைகள், அறுவடைக்குச் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறு நாசமாகியுள்ளமையினால் தம்மைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாக விவசாய சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri