மட்டக்களப்பில் நடமாடும் முதலைகள்
மட்டக்களப்பில் பெய்துவந்த கடும் மழையானது தற்போது குறைவடைந்துள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் முதலைகள் நடமாட்டம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பெய்துவந்த வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை கடந்த இரு தினங்களாக ஓய்ந்துள்ள போதிலும் வீதிகளிலும், கிராமங்களிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதனால், வெல்லாவெளி, கோவில்போரதீவு, பெரியபோரதீவு, உள்ளிட்ட பல பகுதிகளை அண்மித்துள்ள குளங்களில் முதலைகள் நடமாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்டையாடப்படும் கால்நடைகள்
தொடர்ந்து, இந்த முதலைகள், குளக்கரை ஓரங்களில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதிக்குச் செல்லும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அப்பகுதி விவசாய அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து கிராமங்களை அண்மித்துள்ள சிறிய குளங்களுக்கு இம்முதலைகள் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
