மட்டக்களப்பில் முதலை நடமாட்டம் அதிகரிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பருவ மழை கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது.
இந்நிலையில், கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முதலைகள் நடமாட்டம்
போரதீவு பற்று பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கிராமியக் குளங்களை அண்மித்த பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களிலும் இக்குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் காணப்பட்டதால், மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் தாக்கிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan