ஆட்சியாளரை விமர்சிப்பதால் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடாது: சபா குகதாஸ்
இலங்கையின் சிங்கள பேரினவாத ஆட்சியாளரை தொடர்ந்து விமர்சிப்பதால் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு உள் நாட்டுக்குள் தீர்வு கண்டு விட முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கை மாறாக குரோதங்களையும் வன்மங்களையும் ஆழமாக வேரூன்றி இனவாதம் வீச்சுப்பெற வழிவகுக்கும் எனவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
கடந்தகால அனுபவம்
”இன்றுவரை இலங்கையில் தொடர் கதையாக இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் தலைமைகள் கடந்த காலத்தவறுகள் படிப்பினைகள் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் போன்றவற்றை சிந்திக்காது எடுக்கின்ற முடிவுகள் தமிழ் மக்களுக்கு பாரிய பின்னடைவுகளையே வழங்கியுள்ளது.
தமிழர் பிரதிநிதிகள் வெறுமனே இலங்கை நாடாளுமன்றத்தில் ஆட்சியாளரை விமர்சிப்பதால் எந்த வித நன்மைகளும் இல்லை என்பது கடந்தகால அனுபவம்.
தற்போதைய அரசியல் களம்
தற்போதைய அரசியல் கள சூழல் என்பது இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் தமிழர்களுக்கு சாதகமாக புறச்சூழல் காரணிகளை கொண்டமைந்துள்ளது.
குறிப்பாக, பிராந்திய பூகோள போட்டி கூர்மையடைந்து இலங்கை ஆட்சியாளர்கள் பலவீனம் அடைந்துள்ளார்கள்.
தமிழர் தரப்பு ஒற்றுமையாக சிறப்பான தலைமைத்துவத்தை கொடுத்தும், இன்னும் கையறு நிலையிலேயே உள்ளது.
சந்தர்ப்பங்களை தவற விடுவதுடன் தனிமனித நிகழ்ச்சி நிரல்களால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கம் பற்றி பேசுவது கேலிக்குரியதாக மாறியுள்ளது:சரத் பொன்சேகா |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)